Pages

Search This Blog

Thursday, 9 January 2014

Friday, 13 September 2013

இனி ஒரு விதி செய்வோம்


இனி ஒரு விதி செய்வோம்..!
-----------------------------------------
இனி ஒரு விதி செய்வோம் - அதில்
எம் வள்ளுவதை வாழ செய்வோம்
நன்ரென்றும், தீதென்றும் நயம் கொண்ட ......

நம் நெஞ்சில்.

பூவுலகம் தழைக்க செய்த வள்ளுவத்தை
வாழச்செய்வோம்
இனி ஒரு பிறவி உண்டா
கண்டவர்கள் சொன்னதுண்ட
விழுது கொண்ட ஆலமரம்
தன் வேரை தரையில் - ஊன்றி
வருங்காலம் தழைக்கச் செய்யும்
ஆரில் சாவோ , நூரில் சாவோ
நிலையில்லா நம் சதைக்கு
வாழ்வாதறம் ஏதும் உண்டா..

உயிரைக் கொள்ளும்
ஆழி கூட தன் தடயம் விட்டு செல்லும்
அறம் காக்கும் குலத்தாரே
உம்முடைய நிலை என்ன..?

குலம் தழைக்க ' வள்ளுவம் செய்வோம் '
அதை வேர்களுக்கும் ஊரச் செய்வோம்.
- சதாசிவ . இரகு வள்ளுவன்.

Wednesday, 11 September 2013

வள்ளுவனே – உனக்குள்ளும் சக்தி இருக்கு – 1


S Raghu Valluvan Witha Hariharasudhan - Gangaikonda Sozhapuram Visit


                                                    வள்ளுவனே – உனக்குள்ளும் சக்தி இருக்கு – 1



மனிதனாய் பிறந்த அனைவர்க்கும் ஏதோ ஒரு தனித்திறமை இருக்கும் என்பது இங்கு அனைவரும் அறிந்த ஒன்று தான், ஆனால் எம் வள்ளுவனுக்கு மட்டும்  பன்முகப்பட்ட திறமைகள் குவிந்து கிடப்பதின் இரகசியம் என்ன என்ற கேள்வியோடு தொடங்குகிறேன், இந்த கேள்வியை உங்கள் மனதிலும் ஓடவிடுங்கள்.


 வள்ளுவன் வாக்கு மொய்க்காதுஎன்பது ஆண்டாண்டு காலமாக மக்களிடம் வழக்கில் உள்ள ஒரு உண்மை மொழி ,அப்படி வள்ளுவனின் வாக்கிற்கு உள்ள சக்தி என்ன , அந்த சக்தியை யார் அவனுக்குள் ஊட்டியது.

சோதிடக் கலையை பல பல்கலைக் கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டம் என்றும் ஓர் ஆண்டு இரண்டு என்றும் பல அறிஞசர்களை கொண்டு நடத்தப்படும் இன்றைய காலகட்டத்தில்

ஐந்தாம் வகுப்புபோ, பத்தாம் வகுப்போ படித்த எம் கிராமத்து வள்ளுவன் தன் அக்குளில் வைக்கும் பையில் அடக்குகிறனே எப்படி, நூறு பேர்கொண்ட சபையில் ஒரு வள்ளுவனின் பேச்சி ஆற்றலுக்கு ஈடுகாட்ட முடியாது.அந்த திறமை ,ஆற்றல் அவனுள் எப்படி வந்தது.


ஜாதகம்,கைரேகை,நாடி ,குன்டலின்,முகலட்சணம்,மாந்திரிகம்  போன்ற இன்னும் பல அறிந்து மனிதனின் வளர்ச்சி , தொழில் ,குடுப்பா பிரச்னை தொழில் பிரதட்சணை இவைகளை நன்மை தீய்மைகளை கண்டரிந்து அதற்கான தீர்வுகளை சக மனிதனுக்கு எம் பாமர வள்ளுவன் தீர்வு காண்கிறனே அப்பேராற்றல் அவனுக்குள் எப்படி நுழைந்தது.

அன்றைய கால கட்டங்களில் இராஜ குருக்களாகவும். இராஜதந்திர வித்தகர்களாகவும், ஏன்  சித்தர்கலாகவும் ,அரசர்கலாகவும். இன்னும் சொல்ல போனால் திருவள்ளுவர், கணியன் பூங்குகுன்றனார் தொட்டு  , தஞசை  இராமையதாசன் வரையும் அஷ்ட சித்திகள் ( எட்டு ஆழ் மெய்யறிவு ) என்று சொல்ல பட்ட

  • திவ்வியம் - தெய்வம் பற்றியன
  • ஒளத்பாதம் - அற்புதம் பற்றியன
  • ஆந்தரிக்சம் - வான் பற்றியன
  • பெளமம் - பூமி பற்றியன
  • அங்கம் - உடல் உறுப்புகள் பற்றியன
  • சுவாரம் - ஓசை பற்றியன
  • இலக்கணம் - இயல்புகள் பற்றியன
  • வியஞ்சனம் - குறிப்புக்கள் பற்றியன
இவை அனைத்திலும் , அணைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவதின்.விளங்கியதன் இரகசியம் என்ன


இப்படி கலை,இலக்கியம்,சித்தம் மெய்யியல் போற்ற பன்முக அறிவும், இயல்,இசை,நாடகம் என்று தமிழின் அத்துணை  அடையாலங்களிலும் தனித்து திகழ்வத்தில் வல்லமை பெற்றவர்களாக எம் வள்ளுவர்கள் இன்றளவும் சிறந்து விளங்குவத்தின் ஆதி சூத்திரம் என்ன..ஏன்.

சிந்தனை வளரும்.....


இவன்..
சதாசிவ . இரகு வள்ளுவன்.


Wednesday, 4 September 2013

என் மனம் கேட்டவை - அறிமுகப் பகுதி


என் மனம் கேட்டவை
திண்டுகல் மாவட்டம் நாகையக்கோட்டை திரு.காந்திதாசன் இல்ல விழா


எம் சொந்தங்களே ..!
என் விடலை பருவம் தொட்டு இருவரை ஒரு வள்ளுவன் என்ற முறையில் ‘ என் மனம் என்னை கேள்வி கணைகளை கொண்டு துளைத்த வண்ணமே உள்ளது , அக்கனைகளை இத்தொடரின் வழியாக உங்களுடன் பேசவா இந்த பதிவு.
என்னடா இவன் ,இவனின் சுயசரிதத்தை எழுதி இருக்கிறானோ என்ற ஐயப்படும் எழலாம் , அப்படி அல்ல ஒரு கிராமத்து வள்ளுவன் விடலை சிறுவனின் நாயமான கேள்விகள் தான் என்றாலும் ,வாழும் சூழலுக்கு ஏற்ற அவனின் என்னகளும் அமையும் என்பதில் இங்கு யாருக்கும் மாற்று கருத்து இருக்காது என நம்புகிறேம், அந்த நம்பிக்கையுடன் தொடங்குகிறேன்.

பேச்சிகள் தொடரும்..

இவன்,
சதாசிவ.இரகு வள்ளுவன், - S RAGHU VALLUVAN
+91 8220025363
https://www.facebook.com/raghu.geepee
www.valluvankulam.org

Sunday, 23 June 2013

வள்ளுவன் - யார் ? - 3

வள்ளுவர்களின் உயர்ந்த வாழ்வியலைப் பற்றியும், அவர்களின் முழுமையான வீழ்ச்சிக்குப் பின்னரே இங்கு "தீண்டாமை" வலுக்கட்டாயமாகப் புகுத்தப் பட்டதையும், ஆதாரப் பூர்வமாக இது வரைப் பார்த்தோம். இனி வள்ளுவத்தின் தோற்றத்தைப் பற்றியும், தமிழகத்தில் வள்ளுவர்களின் பரவலைப் பற்றியும் காண்போம்.

முன்பே கூறியது போல வள்ளுவத்தின் வரலாறு தெற்கிலிருந்துதான் தொடங்கப்பட வேண்டும். கணியான் விளை, கணியாக் குளம், கணியான் திரடு, கணியம் பாடி, கணியனுர், கணியாக் குறிச்சி, கணியூர் போன்ற குமரி மாவட்டத்தைச் சுற்றியுள்ள ஊர் பெயர்களே இதனை மெய்ப்பிக்கும். மேலும் இன்றைய விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் தச்சநல்லூர், பழையப் பேட்டை, வடக்கன் குளம், ஸ்ரீவைகுண்டம், நான்குநேரி, ராஜபதி போன்ற 42 ஊர்களில் வள்ளுவக் கணியர்கள் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் இதனை மெய்ப்பிக்கும் விதமாக, கி.பி 13 -ம் நூற்றாண்டில் கேரளா நாட்டிற்கு (அன்றைய தமிழகத்தின் சேரல நாட்டிற்கு) வந்திறங்கிய "மார்கோபோலோ" என்கிற மேலை நாட்டு அறிஞரும், கி.பி - 16 ம் நூற்றாண்டில் வந்திறங்கிய "பார்போசா" என்ற அறிஞரும் "வள்ளுவக் கணியர்களைப் பற்றி பெரும் வியப்பான செய்திகள் பலவற்றை எழுதி வைத்துள்ளனர்.

அவை :

i) இந்த உலகத்திலேயே சோதிடம் பார்ப்பதில் வள்ளுவக் கணியர்கள் திறமை சாலிகள் எனவும்,

ii) சோதிடத்தை அவர்கள் ஒரு தொழிலாக செய்யவில்லை எனவும்,
iii) சோதிடம் பார்பதற்காக அவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டாயப் படுத்தி வாங்குவதில்லை எனவும்,
iv) அப்படிக் கட்டாயப்படுத்தி பொருள் வாங்குவது தங்கள் குலத்திற்கு பெரும் இழுக்காக அவர்கள் கருதியதாகவும் எழுதி வைத்துச் சென்றுள்ளனர்....

மேற்கூறிய செய்திகளில் இருந்து உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். அது என்னவெனில்.....

வள்ளுவக் கணியர்கள் சோதிடத்தை ஒரு தொழிலாக செய்யவில்லை எனில் அவர்களின் வாழ்க்கைக்கான வருமானம் எங்கிருந்து கிடைத்தது?.......

அதற்க்கான பதில் தான் அதி முக்கியத்துவம் வாய்ந்தது....

இன்றைய தென் தமிழகத்தில் மட்டுமே வள்ளுவக் கணியர்களின் எண்ணிக்கை சுமார் 1 லட்சத்து முப்பதாயிரத்தைத் தாண்டும் மேலும், முற்காலத்தில் "வள்ளுவ நாடு" மற்றும் "நாஞ்சில் நாடு" போன்று தங்களுக்கென்று தனி நாடுகளையே பெற்றிருந்த வள்ளுவர்கள் சோதிடத் தொழிலை மட்டுமே வைத்துக் கொண்டு இவ்வளவு பெரிய நிலப்பரப்பைக் கட்டி ஆண்டிருக்க முடியாது.

முற்காலத்தில் ஆயக் கலைகள் 64 ஐயும் வள்ளுவக் கணியர்கள் கற்றுத் தேர்ந்திருந்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை. அவர்கள் அரசர்களுக்கு அறிவுரை வழங்கும் அரச குருமார்களாக மட்டும் அல்லாமல், நாட்டு மக்களுக்கு கல்வி புகட்டுகின்ற சிறந்த ஆசானாகவும், அரச காரியங்கள் மற்றும் கோவில் நிகழ்சிகளுக்கு நாள் மீன், கோள் மீன் பார்த்துச் சொல்லும் பார்ப்பாராகவும், இறைவனுக்கு திருப்பணி செய்யும் கோவில் குருமாராகவும், பருவ நிலை மாற்றங்களை முன்கூட்டியே கணித்துக் கூறி விவசாயிகளுக்கு நல்வழிகாட்டியாகவும், நாட்டு மக்களுக்கு இலவசமாக வைத்தியம் பார்த்து சித்த மருத்துவத்தில் கைதேர்ந்தவர்களாகவும் இருந்துள்ளனர்.

இப்படி ஓர் அரசன், மக்களுக்கு தான் ஆற்ற வேண்டிய அனைத்து கடமைகளையும் வள்ளுவக் கணியர்கள் எவ்வித பொருள் நோக்கும் இல்லாமல் ஒரு சேவையாகவே செய்து வந்தனர். இதனால் அரசர்களுக்கும் வள்ளுவக் கணியர்களுக்கும் இணக்கமான சூழல் இருந்து வந்தது. மேலும் வள்ளுவக் கணியர்களின் வாழ்வாதாரத்திற்கும், தேவைகளுக்கும் அரசே நேரடியாக நிதியுதவியைச் செய்து வந்தது. அதன் படி கோவில்களுக்குச் சொந்தமான இறையிலி நிலங்கள் அனைத்தும் வள்ளுவர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டன. அந்நிலங்களில் அவர்கள் விவசாயம் செய்து பொருள் ஈட்டிக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. ஆனால் அவற்றை விற்க மட்டும் அனுமதி வழங்கப் படவில்லை.

அது மட்டுமின்றி ஒவ்வொரு வள்ளுவ குலத்தின் தலைச்சன் பிள்ளை அல்லது ஒரு குடும்பத்திற்கு ஏதேனும் ஒருவராவது அறிவு சார் கலைகளைக் கற்பது கட்டாயமாக்கப் பட்டதால் குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்கள் தங்களுக்கென்று வழங்கப்பட்ட கோவில் நிலங்களில் விவசாயமும் செய்து வந்தனர்.

இந்த செய்திகள் அனைத்தும் செப்புப் பட்டயங்களாகவும், கல்வெட்டுக்களாகவும் அந்நாட்டு அரசனின் ஆணைப் படி கோவில்களின் பாதாள அறைகளில் பத்திரப் படுத்தப் பட்டன. பிறகு கோவில்களைப் பறித்துக் கொண்ட பிராமணர்கள் அந்த ஆதாரங்களை முழுவதுமாக அழிக்க முடியவில்லை, ஏனெனில் கோவில் நகைகளின் பட்டியல் மற்றும் கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் போன்றவற்றின் விபரமும் அதனுடன் சேர்ந்தே எழுதப்பட்டிருந்தது. எனவே கோவிலின் பாதாள அறைகளில் பூதங்கள் காவல் காப்பதாகவும், மீறி உள்ளே நுழைந்தால் அது கண்ணைக் குத்தி விடும் என்றும் கூறி மக்களை முட்டாளாக்கினர். கண்மூடித்தனமான இறைநம்பிக்கையால் இது போன்ற கட்டுக் கதைகளை மக்களும் அப்படியே நம்பினர்.

ஏற்கனவே பிராமணர்களால் வீழ்த்தப்பட்டு நடுத்தெருவில் நின்ற வள்ளுவக் கணியர்களை இது போன்ற செயல்கள் மீளமுடியாத் துயரத்தில் ஆழ்த்தின.

கோவில் நிலங்களின் மீதான வள்ளுவக் கணியர்களின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டன.

அவர்களுக்கு உண்டான அரசு வேலைகள் மற்றும் அரசின் நிதியுதவிகள் அத்துனையும் மறுக்கப்பட்டன.

பிழைக்க வழியின்றி நிர்கதியாய் நின்ற வள்ளுவர்கள் தாங்கள், முன்பு சேவையாக செய்து வந்த சோதிடம் மற்றும் மருத்துவம் போன்றவற்றை வேறு வழியின்றி தொழிலாக மாற்றிக் கொண்டனரே அன்றி அவர்கள் ஒருபோதும் மக்களை ஏய்த்துப் பிழைத்தது இல்லை.

அதனால் தான் இன்றைக்கும் கூட வள்ளுவக் கணியர்கள் வசதி வாய்ப்புக்களில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். நமக்கு முந்தைய தலைமுறையினர், ஒரு நாளைக்கு ஒரு வேலை கூட உணவு இன்றித் தவித்திருந்தாலும், வள்ளுவன் தந்த எழுத்தாணியை மட்டும் அவர்கள் விடாமல் இறுகப் பற்றி நின்றனர்.

அதுதான் இன்று நமக்குள் இருந்து நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறது......

(தொடர்ச்சி...........பாகம் 4 -ல்