வள்ளுவனே – உனக்குள்ளும் சக்தி இருக்கு – 1
S Raghu Valluvan Witha Hariharasudhan - Gangaikonda Sozhapuram Visit |
வள்ளுவனே – உனக்குள்ளும் சக்தி இருக்கு – 1
மனிதனாய் பிறந்த அனைவர்க்கும் ஏதோ ஒரு தனித்திறமை இருக்கும் என்பது இங்கு அனைவரும் அறிந்த ஒன்று தான், ஆனால் எம் வள்ளுவனுக்கு மட்டும் பன்முகப்பட்ட திறமைகள் குவிந்து கிடப்பதின் இரகசியம் என்ன என்ற கேள்வியோடு தொடங்குகிறேன், இந்த கேள்வியை உங்கள் மனதிலும் ஓடவிடுங்கள்.
“ வள்ளுவன் வாக்கு மொய்க்காது ‘ என்பது ஆண்டாண்டு காலமாக மக்களிடம் வழக்கில் உள்ள ஒரு உண்மை மொழி ,அப்படி வள்ளுவனின் வாக்கிற்கு உள்ள சக்தி என்ன , அந்த சக்தியை யார் அவனுக்குள் ஊட்டியது.
சோதிடக் கலையை பல பல்கலைக் கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டம் என்றும் ஓர் ஆண்டு இரண்டு என்றும் பல அறிஞசர்களை கொண்டு நடத்தப்படும் இன்றைய காலகட்டத்தில்
ஐந்தாம் வகுப்புபோ, பத்தாம் வகுப்போ படித்த எம் கிராமத்து வள்ளுவன் தன் அக்குளில் வைக்கும் பையில் அடக்குகிறனே எப்படி, நூறு பேர்கொண்ட சபையில் ஒரு வள்ளுவனின் பேச்சி ஆற்றலுக்கு ஈடுகாட்ட முடியாது.அந்த திறமை ,ஆற்றல் அவனுள் எப்படி வந்தது.
ஜாதகம்,கைரேகை,நாடி ,குன்டலின்,முகலட்சணம்,மாந்திரிகம் போன்ற இன்னும் பல அறிந்து மனிதனின் வளர்ச்சி , தொழில் ,குடுப்பா பிரச்னை தொழில் பிரதட்சணை இவைகளை நன்மை தீய்மைகளை கண்டரிந்து அதற்கான தீர்வுகளை சக மனிதனுக்கு எம் பாமர வள்ளுவன் தீர்வு காண்கிறனே அப்பேராற்றல் அவனுக்குள் எப்படி நுழைந்தது.
அன்றைய கால கட்டங்களில் இராஜ குருக்களாகவும். இராஜதந்திர வித்தகர்களாகவும், ஏன் சித்தர்கலாகவும் ,அரசர்கலாகவும். இன்னும் சொல்ல போனால் திருவள்ளுவர், கணியன் பூங்குகுன்றனார் தொட்டு , தஞசை இராமையதாசன் வரையும் அஷ்ட சித்திகள் ( எட்டு ஆழ் மெய்யறிவு ) என்று சொல்ல பட்ட
- திவ்வியம் - தெய்வம் பற்றியன
- ஒளத்பாதம் - அற்புதம் பற்றியன
- ஆந்தரிக்சம் - வான் பற்றியன
- பெளமம் - பூமி பற்றியன
- அங்கம் - உடல் உறுப்புகள் பற்றியன
- சுவாரம் - ஓசை பற்றியன
- இலக்கணம் - இயல்புகள் பற்றியன
- வியஞ்சனம் - குறிப்புக்கள் பற்றியன
இவை அனைத்திலும் , அணைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவதின்.விளங்கியதன் இரகசியம் என்ன
இப்படி கலை,இலக்கியம்,சித்தம் மெய்யியல் போற்ற பன்முக அறிவும், இயல்,இசை,நாடகம் என்று தமிழின் அத்துணை அடையாலங்களிலும் தனித்து திகழ்வத்தில் வல்லமை பெற்றவர்களாக எம் வள்ளுவர்கள் இன்றளவும் சிறந்து விளங்குவத்தின் ஆதி சூத்திரம் என்ன..ஏன்.
சிந்தனை வளரும்.....
இவன்..
சதாசிவ . இரகு வள்ளுவன்.
No comments:
Post a Comment