இனி இந்திய வரலாற்றையே தலைகீழாய் புரட்டிப்போட வல்ல 2 மிக முக்கியமான தரவுகளைப் பற்றி காண்போம்.... ........
தரவு : 1
கேரளாவில் உள்ள "பொன்னானி வட்டத்து சுகபுரம்" என்னும் ஊரிலுள்ள கல்வெட்டொன்று (5.1.1.Vol .V.No.775) பின்வருமாறு கூறுகிறது. அது.
"சொகிரத்துப் படையாகும்.....,இராய சேகராயின வள்ளுவரும் கூடிச் செய்த கச்சாமாவது" என்பதாகும்.
தரவு : 2
இதே கேரளாவிலுள்ள பொன்னானி வட்டத்துப் புக்காட்டூரிலுள்ள மற்றொரு கல்வெட்டு (A.R.N. 349 of 1924) அது என்னவெனில்...
"புக்காட்டூர் ஊர் சபையோரும், வள்ளுவர்களும், பிராமணர்களும் கோயில் அதிகாரிகளும் சேர்ந்து இறைவனுக்குத் திருப்பணி ஆற்றினர் என்பதாகும்.
இக்கல்வெட்டுகளில் ஒளிந்திருக்கும் அப்பட்டமான உண்மைகள் :
1) பல்லாயிரம் வருடங்களாக வள்ளுவ குலத்தவர் கோவில்களில் திருப்பணி ஆற்றி வந்தனர்.
2) வள்ளுவக் கணியர்களுடன் சேர்ந்து புக்காட்டூர் ஊர் பொதுமக்களும் கோவில் திருப்பணி ஆற்றியதன் மூலம் "தீண்டாமை" என்பது வள்ளுவர்களிடம் அறவே இல்லை என்பது தெளிவாகிறது.
3) இக்கல்வெட்டு வடிக்கப்பட்ட காலம் கி.பி 12 -ம் நூற்றாண்டு என்பதால் வெறும் 800 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆரிய பிராமணர்கள் எழுச்சி பெற்றிருக்க வில்லை என்பது தெளிவாகிறது.
4) கி.பி. 12 -ம் நூற்றாண்டுக்குப் பிறகு ஆரிய மன்னர்களின் படையெடுப்பு மிக அதிக அளவில் இருந்ததால் அதன் பிறகு தமிழர்கள் முற்றிலும் அடிமைப் படுத்தப் பட்டு வள்ளுவக் கணியர்கள் முற்றிலும் வீழ்த்தப்பட்டிருக்க வேண்டும்.
5) தமிழர்களை படை வழியில் வீழ்த்திய ஆரிய மன்னர்கள் "காக்கைக்கும் தன குஞ்சு பொன்குஞ்சு" என்பது போல அரைவேக்காட்டு ஆரிய பிராமணர்களையே கோவில்களில் முன்னிலைப் படுத்தியதால் வள்ளுவர்கள் சொல்லொனாத் துயரத்திற்கு ஆட்படுத்தப் பட்டு பின் கோவில்களை விட்டு முழுமையாக விரட்டியடிக்கப் பட்டனர்.
6) எனவே வள்ளுவர்களை முழுமையாக வீழ்த்திய பின்புதான் ஆரிய பிராமணர்களால் தீண்டாமையை முழுமையாக அமல்படுத்த முடிந்தது என்பதும் தெளிவாகிறது. கேரளத்திலிருந்து பின் தமிழகம் முழுவதும் இந்த தீண்டாமை பரவியதும் உண்மை. இந்தியாவிலேயே வேறெங்கும் இல்லாத விதமாக கேரளாவின் "வைக்கம்" என்னும் ஊரில் தான் தீண்டாமைக் கொடுமை உச்சத்திலிருந்த செய்தியே எனது கூற்றை மெய்ப்பிக்கும்.
7) திருமலை திருப்பதி உட்பட தென்னிந்தியாவின் பெரும்பாலான கோவில்கள் வள்ளுவ குலத்தவரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. இதனால் அக்கோவில்களின் கல்வெட்டுக்கள், செப்பேடுகள், செப்புப் பட்டயங்கள் போன்றவற்றில் கோவில்களில் வள்ளுவர்கள் ஆற்றிய பணிகள், அவர்களுக்குண்டான சிறப்பு அதிகாரங்கள், கோவில் சொத்துக்களில் வள்ளுவர்களுக்குண்டான பங்குகள் போன்ற செய்திகள் எழுதிவைக்கப் பட்டிருந்தன. பின்னர் படைவழியில் கோவில்களைப் பறித்துக் கொண்ட பிராமணர்கள் இந்த ரகசியங்களை மூடி மறைக்க தீண்டாமையை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொண்டனர். கேரளக்கோவில்கள், மற்றும் திருப்பதியில் உள்ள கல்வெட்டுக்கள் அனைத்துமே இன்றளவும் தூயதமிழிலேயே உள்ளன. அவற்றை ஆராய்ந்து பார்த்தால் ஆரியப் பூசாரிகளின் குட்டு வெளிப்பட்டுவிடும்.
8) பத்மநாதபுரம் கோவில் ரகசியங்கள் தற்பொழுது வெளிவந்து விட்டதால் "தீண்டாமை"என்ற பெயரில் இவர்கள் போட்ட ஆட்டங்களும் வெளிச்சத்துக்கு வெளிவந்துவிட்டன. கோவிலின் ரகசிய அறைகளில் உள்ள பொற்குவியல்களின் மீதே அனைவரின் கவனமும் உள்ளது. ஆனால் அவற்றுடன் சேர்ந்து உள்ள செப்புப் பட்டயம், ஓலைச்சுவடிகளில் உள்ள ரகசியங்கள் வெளிப்படவேண்டும். ஆனால் இது சாத்தியப்படுமா என்றால் சந்தேகமே ஏனெனில் இன்றைய இந்தியாவின் மீமிக உயர் அதிகாரத்தில் உள்ளவர்கள் கூட வேற்று சாதியராக இருந்தால் இக்கோவில்களின் ரகசிய அறைகளுக்குள் நுழைய முடியாதபடி தனி சட்டமே வைத்துள்ளனர்.
(புதிர்கள் அவிழும்..........அடுத்த தொடரில்)

No comments:
Post a Comment