Pages

Search This Blog

Thursday, 11 April 2013

வள்ளுவன் யார் ? - பகுதி -1

உலகிலேயே தங்கள் சமூகம் தான் உயர்ந்தது என்று பெருமையடித்துக் கொள்ளும் கூட்டங்கள் இங்கு உண்டு.ஆனால் அவர்களின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் 500 வருடங்களுக்கு முன்புவரை அப்படி ஒரு சமூகமே இருந்திருக்காது. தங்கள் குட்டு வெளிப்பட்டுவிடும் எனக்கருதி வரலாற்றை அவர்கள் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் "வள்ளுவ குலத்தின்" தொன்மையை ஆய்ந்தோமானால் நாம் சற்றேறக்குறைய 15000 ஆண்டுகளுக்கு முன் செல்ல வேண்டும். அது திருவள்ளுவரின் காலமான கி.மு 3 -ம் நூற்றாண்டிற்கும் மிக மிக முந்தையது. இதுவே எம் குலத்தின் பெருமையாகும்.

... கி.மு 15 -ல் இயற்றப்பட்ட தொல்காப்பியம் சோதிடர்களை இரு பெயர் கொண்டு அழைக்கிறது. ஒன்று "அறிவன்" மற்றொன்று "கணியன்" இந்தப் பெயர்களே சில நூற்றாண்டுகள் பின்னர் "வள்ளுவக் கணியன்" என்றானது. வள்ளுவன் என்றால் கூரான அறிவுடையோன் என்று பொருள்படும். திருவள்ளுவர் இவ்வள்ளுவ குலத்தின் அரசராக இருப்பினும் அவர் சோதிடப் புலமையும் பெற்றிருந்தார் என்கிறது புலவர் புராணம். மேலும் "செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தான்" என்ற பெயரானது திருவள்ளுவர் வள்ளுவ குலத்தைச் சார்ந்தவர் என்பதை மெய்பிக்கும். பின்னர் இவ் வள்ளுவக் குடியினர் வேந்தர் குடிகளாகி வள்ளுவநாடு, நாஞ்சில் நாடு போன்ற தனி நாடுகளைப் பெற்றனர். ஒவையார் காலத்தில் காலத்தில் நாஞ்சில் மன்னன் ஆண்டான் என்கிறது சங்கத்தொகை நூல். புறநானூற்றில் ஒரு பாடல் திருக்குறளை அறம் எனக் கூறுவதால் வள்ளுவக்குடி திருவள்ளுவருக்கும் முந்தையது என்பது புலனாகும்.

வள்ளுவ குலத்தின் தொன்மைக்கான இலக்கியத் தரவுகள் பல உள்ளன.
அவற்றில் சில :

"வள்ளுவன் சாக்கை யெனும்பெயர் மன்னற்
குள்பாடு கருமந் தானவர்க் கொன்றும்
- (திவாகரம்).

"வள்ளுவர் முரசமூதூ ரரைகென வருளிநானே"
- (சீவகசிந்தாமணி - 2149)

"வாய்ந்த வந்நிரை வள்ளுவன் சொனான்"
- (சீவகசிந்தாமணி - 419)

"முரசெறி வள்ளுவ முதயனைத் தரீஇக்"
-(பெருங்கதை - 1:47:156)

"திருக்கையுள்ள வள்ளுவனைப்
பெருக்க முரசடியு மென்பார்."
"திருநாள் படைநாள் கடிநா ளேன்றிப்
பெருநாட் கல்லது பிறநாட் கரையைச்
செல்வச் சேகை வள்ளுவ முதுமகன்"
-(பெருங்கதை - 2 :2.32 - 33)

மேற்கண்ட சான்றுகளிலிருந்து சோதிடத் தொழில் செய்து வந்த வள்ளுவ சமுதாயம் நம் மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டு வந்ததையும், அரசர்களுக்கு இணக்கமாக இருந்துள்ளதையும் உணரமுடிகிறது.

இனி இந்திய வரலாற்றையே தலைகீழாய் புரட்டிப்போட வல்ல 2 மிக முக்கியமான தரவுகளைப் பற்றி காண்போம்.... ........

No comments:

Post a Comment